17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

0
17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

தமிழகத்தில் வார இறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

சிறப்பு பேருந்து:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விடுமுறையில் உள்ளனர். எனவே பலரும் சுற்றுலா செல்வது உறவினர் ஊருக்கு செல்வது என பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வார இறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழக அரசில் 4000 காலிப்பணியிடங்கள் – இன்றே கடைசி நாள்!!

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், வரும் வெள்ளிக் கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!