தமிழ்நாடு வனத்துறை தேர்வுக்கு படிக்கிறீங்களா? அப்போ இதுவும் தெரிஞ்சுக்கோங்க!

0
தமிழ்நாடு வனத்துறை தேர்வுக்கு படிக்கிறீங்களா? அப்போ இதுவும் தெரிஞ்சுக்கோங்க!
தமிழ்நாடு வனத்துறை தேர்வுக்கு படிக்கிறீங்களா? அப்போ இதுவும் தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள். தேர்வர்கள் இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்வது மிகவும் முக்கியம். மேலும் தேர்வர்கள் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் படிப்பது தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்து.

1. பூதான் இயக்கத்தை ஆரம்பித்தவர்

(Α) ஜெயபிரகாஷ் நாராயணன்

(B) ஜவஹர்லால் நேரு

(C) ஆச்சாரிய வினோபா பாவே

(D) டாக்டர் ராஜேந்திர பிரசாத்

விடை : (C)

2. உணவுக்கு வேலை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

(A) நான்காம் ஐந்தாண்டு திட்டம்

(B) ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்

(C) ஆறாம் ஐந்தாண்டு திட்டம்

(D) ஏழாம் ஐந்தாண்டு திட்டம்.

விடை : (B)

3. அகிம்சை மற்றும் சத்தியம் போன்ற கொள்கைகளை காந்திக்கு விதைத்தவர் யார்?

(A) கோகலே

(B) திலகர்

(C) லாலா லஜபதி ராய்

(D) ராஜ்சந்திர ரவிஜிபாய்

விடை : (D)

4. யூரியாவில் உள்ள நைட்ரஜனின் அளவு என்ன?

(A) 50% நைட்ரஜன்

(B) 46% நைட்ரஜன்

(C) 80% நைட்ரஜன்

(D) 90% நைட்ரஜன்

விடை : (B)

5. நாட்டு வருமானத்தை கணக்கிடும் வழிமுறைகள்

(A) 2 முறைகள்

(B) 3 முறைகள்

(C) 4 முறைகள்

(D) 5 முறைகள்

விடை : (B)

6. யுரேஷியாவில் காணப்படும் புல்வெளி

(A) பாம்பாஸ்

(B) வெல்டு

(C) டௌன்ஸ்

(D) ஸ்டெப்பி

விடை : (D)

7. சூழ்நிலை மண்டலத்தின் மாசுக்களை காட்டும் உயிருள்ளவை இவை

(A) ஒட்டுண்ணிகள்

(B) சாறுண்ணிகள்

(C) பூஞ்சை

(D) லைக்கன்ஸ்

விடை : (D)

8. எந்த உபகரணம் பாலின் அடர்த்தி வேறுபாடு மற்றும் பாலின் தூய தன்மை அறிய பயன்படுகிறது?

(A) பாக்டோமீட்டர்

(B) லாக்டோமீட்டர்

(C) பைரோமீட்டர்

(D) ஹைடிரோமீட்டர்

விடை : (B)

9. மாநில அவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை

(A) 220 உறுப்பினர்கள்

(B) 230 உறுப்பினர்கள்

(C) 250 உறுப்பினர்கள்

(D) 200 உறுப்பினர்கள்

விடை : (C)

10. இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆணையர்களின் எண்ணிக்கை

(A) 1

(B) 2

(C) 3

(D) 4

விடை : (C)

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!