தமிழகத்தை அச்சறுறுத்தும் டெங்கு காய்ச்சல் – அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு?!

0
தமிழகத்தை அச்சறுறுத்தும் டெங்கு காய்ச்சல் - அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு?!

தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் கொளுத்தி எடுத்து வருகிறது. இதன் வெப்ப அலையால் மக்கள் பல்வேறு விதமான நோய்களுக்கும் தோல் பிரச்சனைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், புதிய பிரச்சனையாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

தமிழகத்தில் ஆங்காங்கே தென்பட்ட டெங்கு காய்ச்சல் இப்பொழுது தமிழகம் முழுவதும் நிறைய இடங்களில் பரவி விட்டது. குறிப்பாக, திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

தமிழ்நாடு வனத்துறை தேர்வுக்கு படிக்கிறீங்களா? அப்போ இதுவும் தெரிஞ்சுக்கோங்க!

எனவே தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநரிடம் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை கடைபிடித்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை தினமும் பெற்றுக் கண்காணிக்கவும் உத்தரவு வெளியாகியுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!