தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு..!!

0
?????????? ??????? ??????????????? ????????????.. ???????? ??.?.???????? ??????? ???????..!!
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு..!!

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு..!!

வழக்கமாக மே இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, நடப்பாண்டில் 2 வாரம் முன்னதாக, தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி மே 13 ஆம் தேதி அன்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பருவமழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19-05-2025) ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது “இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும் என்றும், மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, “பேரிடர் முகாம்கள் தயார் நிலையில் இருப்பதுடன், உணவு உள்ளிட்டவையும் போதுமான அளவு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அதிகனமழை, புயல் ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்கள் தயாராக இருக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!