விரைவில் வெளியாகும் புதிய ரூபாய் நோட்டுகள்.. RBI அறிவித்த முக்கிய தகவல்..!!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) என்பது இந்தியக் குடியரசால் இயக்கப்படும் மத்திய வங்கியாகும். மேலும், நாட்டின் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி, பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை நிர்வகிப்பதே ரிசர்வ் வங்கியின் முக்கிய பணியாகும். இந்நிலையில் “சில நாட்களுக்கு முன்பு புதிய ரூ.20 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும், இந்த நோட்டுகளில் புதிதாக நியமிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இருக்கும்” என RBI தெரிவித்திருந்தது.
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு..!!
“இந்த புதிய 20 ரூபாய் நோட்டின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டைப் போலவே இருக்கும் என்றும், ரிசர்வ் வங்கி சட்ட பிரிவு 26(2) இன் படி, RBI வெளியிடும் ஒவ்வொரு நாணயம் மற்றும் நோட்டையும் அனைத்து மக்களும் ஏற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ரூ. 20 நோட்டுகள் விரைவில் சந்தைக்கு வந்தாலும், பழைய ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்பதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை” என RBI தெரிவித்துள்ளது.
Join the ExamsDaily Whatsapp Group

























