தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு.. அதிர்ச்சியில் பொது மக்கள்..!!

0
??????????? ???? ??????? ??????.. ????????????? ???? ??????..!!
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு.. அதிர்ச்சியில் பொது மக்கள்..!!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு.. அதிர்ச்சியில் பொது மக்கள்..!!

இன்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தைக் கையாளும் மின் வாரியத்தின் இழப்பு தொடர்ந்து அதிகரித்தால் 2022 ஆம் ஆண்டு மின் கட்டணத்தை 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தியது. பின்னர் 2023 ஆம் ஆண்டு 2.18 சதவீதமாகவும், 2024 ஆம் ஆண்டு 4.83 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை 6 சதவீதமாக உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்..!!

இந்தக் கட்டண உயர்வு வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும தொழிற்சாலைகளுக்கு அமல்படுத்தப்படும். இந்த விஷயம் தொடர்பாக மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், “மின் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை கொடுத்தாலும், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி இருக்க தமிழக முதல்வர் முடிவு எடுப்பார் என்றும், வரும் ஜூலை 1 ஆம் தேதிக்குள் இதற்கான முடிவு எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Join the ExamsDaily Whatsapp Group

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!