SBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ஆகஸ்ட் 31 வரை கட்டணம் தள்ளுபடி!

0
SBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - ஆகஸ்ட் 31 வரை கட்டணம் தள்ளுபடி!
SBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - ஆகஸ்ட் 31 வரை கட்டணம் தள்ளுபடி!
SBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ஆகஸ்ட் 31 வரை கட்டணம் தள்ளுபடி!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (State Bank India) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 31ம் தேதி வரை வீட்டுக் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ அறிவிப்பு:

பாரத ஸ்டேட் வங்கி (SBI) இன்று Monsoon Dhamaka என்ற சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி வீட்டுக் கடன்களுக்கான செயலாக்க கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது. இது தற்போதுள்ள கட்டணமான 0.40 சதவீதத்திலிருந்து குறிப்பிடத்தக்க குறைப்பு ஆகும். இந்த சலுகையின் மூலம் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் பயனடைவர். இந்த சலுகை வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 5 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

SBI ஆனது தனது யோனோ (yono) ஆப் மூலம் விண்ணப்பிக்கப்படும் வீட்டுக் கடனுக்கான 5 பிபிஎஸ் (0.05 சதவீதம்) கட்டணமும் இந்த சலுகையின் கீழ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. வீட்டுக் கடன் வாங்கிய பெண்களும் 5 பிபிஎஸ் சலுகைக்கு தகுதியானவர்கள் என கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலம் ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களை தக்கவைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்கிறது.

ஆகஸ்ட் 2 முதல் 9 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

எஸ்பிஐ வீட்டுக்கடன் வட்டி விகிதம் 6.70 சதவிகிதத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இன்று முதல் நாடு முழுவதும் ATM சேவை கட்டணங்கள் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!