மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை மாதத்திற்கான AICPI குறியீட்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 4% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்நிலையில், ஜனவரி மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் உயர்வு வழங்கப்பட்ட நிலையில் ஜூலை மாதத்திற்கான உயர்வினை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Join Our WhatsApp
Group” for Latest Updates
மேலும், ஏஐசிபிஐ இன்டெக்ஸ் குறியீட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டில்(AICPI) சரிவு ஏற்பட்ட நிலையில் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஏஐசிபிஐ குறியீட்டு எண்ணிக்கை அதிகரித்து இருந்தது.
தமிழகத்தில் சூறைக்காற்றினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு – அமைச்சர் அறிவிப்பு!
இந்நிலையில், இம்மாதம் மட்டுமே 0.72 சதவீதம் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் 4% கட்டாயமாக அகவிலைப்படி உயர்வு இருக்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது.