தமிழகத்தில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை – வெளியான முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை - வெளியான முக்கிய தகவல்!
தமிழகத்தில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை - வெளியான முக்கிய தகவல்!
தமிழகத்தில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை – வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை மே மாத நிலவரப்படி 66.70 லட்சமாக இருக்கிறது.

வேலைவாய்ப்பு எண்ணிக்கை

தமிழகத்தில் பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு பலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து இருக்கின்றனர். இந்நிலையில் மே மாத நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மே 31 ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 70 ஆயிரத்து 825 ஆக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதில் ஆண்கள் 30 லட்சத்து 98 ஆயிரத்து 879 பேரும், பெண்கள் 35 லட்சத்து 71 ஆயிரத்து 680 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 266 பேரும் இருக்கின்றனர். மேலும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்தவர்களின் வயது வாரியான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு!

அதன் படி 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 39 ஆயிரத்து 747 பேரும், 19 முதல் 30 வயது கல்லூரி மாணவா்கள் 28 லட்சத்து 33 ஆயிரத்து 380 பேரும், 31 முதல் 45 வயது வரை இருப்பவர்கள் 18 லட்சத்து 44 ஆயிரத்து 601 பேரும், 46 வயது முதல் 60 வயது வரை உள்ள பதிவுதாரா்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 705 பேரும் இருப்பதாகவும், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் 6 ஆயிரத்து 391 போ் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!