
போர்நிறுத்தம் குறித்து தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்.. ரஷ்யா மற்றும் உக்ரைன் அரசாங்கங்கள் சார்பில் அறிவிப்பு..
மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பல்வேறு முறை இரு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருகிறார். அந்த வகையில் இடைக்கால போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உக்ரைன் நாட்டு எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்த கூறி வலியுறுத்தினார். அதற்கு அதிபர் புதினும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் இந்த இடைக்கால போர் நிறுத்தம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் ரூ. 3 லட்சம் நிதி உதவி…தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்
அதாவது, “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் யோசனையின் பெயரில் இடைக்கால போர்நிறுத்த உடன்படிக்கை குறித்து அமெரிக்க குழுவுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்யா மற்றும் உக்ரைன் அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பேச்சுவார்த்தை தொடர்பான இரு நாடுகளுடனான நேர்காணல் மீண்டும் சவுதி அரேபியாவில் வரும் திங்கட்கிழமை (24-03-2025) நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.


























