கலைஞர் கைவினைத் திட்டத்தில் ரூ. 3 லட்சம் நிதி உதவி…தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்

0
?????? ???????? ??????????? ??. 3 ?????? ???? ????...????? ???????????? ????????? ?????? ?????
கலைஞர் கைவினைத் திட்டத்தில் ரூ. 3 லட்சம் நிதி உதவி...தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்

கலைஞர் கைவினைத் திட்டத்தில் ரூ. 3 லட்சம் நிதி உதவி…தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்

பிரதமர் மோடி அவர்களால் கடந்த 2023 ஆம் ஆண்டு நாடு முழுவதும் “விஸ்வகர்மா திட்டம்” தொடங்கப்பட்டது. இதை, மற்ற மாநிலங்கள் நடைமுறைப்படுத்துவதை தொடர்ந்து,  தமிழ்நாடு மட்டும் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதாவது, ஜாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்துவதாகவும், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தியும் நடைமுறைப் படுத்தவில்லை என்பதாலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே, இதற்கு பதிலாக தமிழ்நாட்டில் “கலைஞர் கைவினைத் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

நீங்க ஆதார் அப்டேட் பண்ணிட்டிங்களா…?? இல்லன்னா உடனே பண்ணிருங்க…அரசு போட்ட அதிரடி உத்தரவு

அதாவது, இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ. 50,000 அல்லது 25% மானியத்துடன் கூடிய ரூ. 3 லட்சம் கடனுதவி, 5% வட்டி மானியம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளும் வழங்க உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “கலைஞர் கைவினைத் திட்டத்திற்கு இதுவரை தமிழ்நாட்டில் 7,897 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ. 28 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார். மேலும், “இத்திட்டத்தில் மொத்தம் 10,000 கைவினை கலைஞர்கள் பயன்படும் வகையில் ரூ.138 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்” அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!