நீங்க ஆதார் அப்டேட் பண்ணிட்டிங்களா…?? இல்லன்னா உடனே பண்ணிருங்க…அரசு போட்ட அதிரடி உத்தரவு
ஆதார் அட்டை தற்போது தனிமனிதனின் முக்கிய அடையாளமாக மாறி விட்டது. ஏனென்றால், நாம் வங்கி கணக்கு மற்றும் ரேஷன் கார்டு போன்ற முக்கியமான ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைத்து வைத்துள்ளோம். மேலும், இவை அனைத்திற்கும் நாம் ஆதார் அட்டையை பயன்படுத்துவதால், அவற்றை புதுப்பிப்பது முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், இவற்றை உரிய காலத்தில் நாம் புதுப்பிக்காவிட்டால் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி மற்றும் ரேஷன் கணக்கை உபயோகிப்பதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, ஆதாரை 10 வருடத்திற்கு ஒரு முறை அப்டேட் செய்வது அவசியமாகும்.
மேலும், தமிழ்நாடு அரசு 10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதாரை புதுப்பிப்பது அவசியம் என்பதை உணர்த்துவதற்காக, வருகின்ற டிசம்பர் 12 ஆம் தேதி வரை இலவசமாக இணையத்தளத்தில் புதுப்பித்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், இ -சேவை மையம் மற்றும் தாலுகா அலுவலக இ -சேவை மையங்களில் ஆதார் அட்டை புதுப்பித்தலை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. அதேபோல், ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் போன்ற திருத்தங்களையும் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
























