காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம் – சூப்பர் கண்டுபிடிப்பு!
பல்வேறு விஷயங்களுக்கும் புது வகையான தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது காணாமல் போனவர்களை மீண்டும் கண்டுபிடிப்பதற்காக புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கண்டுபிடிப்பு:
நவீன யுகத்தில் தொழில்நுட்பத்தின் உதவி அனைத்து விஷயங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. முன்னதாக பல படிநிலைகளில் செய்து வந்த வேலைகள் அனைத்தும் தற்போது ஒரே கிளிக்கில் செய்து முடிக்கப்படுகிறது. அந்த வகையில் தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பம் ஒன்று அக்ஷய் என்ற இளைஞரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்கத்தின் விலை திடீர் உயர்வு – சவரனுக்கு ரூ. 44,240 க்கு விற்பனை!
மறதி நோய் உள்ளவர்கள், முதியவர்கள் தொலைந்து போனால் அவர்களை கண்டுபிடிக்கும் வகையில் க்யூ ஆர் கோடு ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த க்யூ ஆர் கோடை உள்ள பேட்சை அணிந்திருக்கும் பட்சத்தில் அதனை ஸ்கேன் செய்து காணாமல் போனவரின் பெயர், முகவரி, ரத்த வகை, தொலைபேசி எண் போன்ற முக்கிய விஷயங்களை அறிந்து அவர்களை உரிய இடத்தில் சேர்க்க முடியும். இந்த கண்டுபிடிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Join Our WhatsApp
Group” for Latest Updates