கர்ப்பமாகும் மீனா.. வீட்டை விட்டு துரத்தும் விஜயா – “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
விஜயா மீனாவின் தங்கச்சியும், தன்னுடைய மகனும் காதலிப்பதாக நினைத்து பிரச்சனை செய்ய இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை:
சிறகடிக்க ஆசை சீரியலில், மனோஜ் பணத்தை எடுத்துவிட்டதை முத்து கண்டுபிடிக்கிறார். அதனால் முத்து மீது மீனாவிற்கு நல்ல எண்ணம் வருகிறது. மேலும் இருவரும் சந்தோசமாக வாழ தொடங்கி இருக்கின்றனர். மறுபக்கம் ரவியும் ஸ்ருதியும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே மீனாவின் தங்கை வீட்டிற்கு வரும் போது விஜயா ரவி உடன் பேசவிடாமல் சந்தேகப்படுவார்.
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம் – சூப்பர் கண்டுபிடிப்பு!
அதே நேரத்தில் ரவி மீனாவின் தங்கையை வண்டியில் வைத்து கொண்டு வெளியே செல்ல, விஜயாவின் தோழி அதை பார்த்துவிட்டு விஜயாவிடம் மாட்டி விடுகிறார். விஜயா நான் எது நடக்க கூடாது என நினைத்தேனோ அது நடந்துவிட போகிறது என பயந்து, மீனாவிடம் சண்டை போடுகிறார்.
மீனா என் தங்கை அப்படி எல்லாம் இல்லை என சொன்னாலும், விஜயா சண்டை போட்டு மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். அப்போது மீனா கர்ப்பமாக இருக்கும் உண்மை தெரிய வர இருக்கிறது. இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.