விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்கத்தின் விலை திடீர் உயர்வு – சவரன் ரூ. 44,240க்கு விற்பனை!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்கத்தின் விலை உயர்ந்து சவரனுக்கு ரூ. 44,240 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தங்கத்தின் விலை:
இந்தியாவில் பங்குச்சந்தை நிலவரத்தைப் பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.6,000க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.48,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ. 5,530 க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ. 44,240 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தில் 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
இதனையடுத்து, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் விலை அதிகரிக்கும் என்பதால் இன்றே நகை வாங்க தாய்மார்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதே போல, நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ரூ.78.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.