இலவசமாக 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டம்…சாமானிய மக்களுக்கு அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி

0
??????? 20 ??????? ?????????????????? ???????? ????? ???????...??????? ?????????? ???? ??????? ???? ?????????
இலவசமாக 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டம்...சாமானிய மக்களுக்கு அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி

இலவசமாக 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டம்…சாமானிய மக்களுக்கு அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி

புதுச்சேரி அரசு கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில், குறிப்பாக விரிவான குடிநீர் திட்டத்தின் மூலம் கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடிநீரை சுத்திகரித்து மானிய விலையில் விநியோகிப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த கால தாமதம் ஏற்படும் என்பதால், தற்போதைய குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சமி நாராயணன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, “புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (RO Water) இலவசமாக வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார். இதையடுத்து, “புதுச்சேரியில் விரிவான குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்” என்றும், “அதுவரை இந்த இலவச 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!