
ECIL ஆணையத்தில் Assistant Project Engineer காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.55,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது Project Engineer, Technical Officer, Assistant Project Engineer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
ECIL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Engineer, Technical Officer, Assistant Project Engineer பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Project Engineer – 1 பணியிடம்
Assistant Project Engineer – 3 பணியிடங்கள்
Technical Officer – 3 பணியிடங்கள்
கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Engineer – BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Technical Officer – BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Project Engineer – Diploma (ECE / EEE / E&I / Mechanical or EM / Electrical / Instrumentation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ECIL வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.37,000/- சம்பளத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || நேர்காணல் மூலம் தேர்வு!
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Project Engineer:
1st year – ரூ.40,000/-
2nd year – ரூ.45,000/-
3rd year – ரூ.50,000/-
4th year – ரூ.55,000/-
Technical Officer:
1st year – ரூ.25,000/-
2nd year – ரூ.28,000/-
3rd year – ரூ.31,000/-
Assistant Project Engineer – ரூ. 24,804/-
ECIL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Qualification, Experience, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 26.03.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























