
இன்று பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் கட்…அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் கடந்த 1 வருடமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து வருகின்றனர். அதில், குறிப்பாக 2023 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு, அவர்கள் அரசிடம் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் ஒரு பலனும் அளிக்கவில்லை.
பள்ளி மாணவர்களுக்கு 100 நாள் வெளிப்படை சவால்…பள்ளிகளுக்கு பறந்த தமிழ்நாடு அரசின் அதிரடி கடிதம்
இதையடுத்து, கடந்த வாரம் வெளியான தமிழ்நாடு பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், இதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிடவில்லை. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதற்கு, “தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இன்று ஊதியம் கிடையாது” என்று தெரிவித்துள்ளது. மேலும், “மருத்துவ விடுப்பு தவிர இன்று ஒருநாள் விடுமுறை எடுத்த அரசு ஊழியர்களின் பட்டியலையும், இன்று காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் பட்டியலையும் சேகரித்து அனுப்புமாறும்” உத்தரவிட்டுள்ளது.

























