10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – இன்று முதல் தொடக்கம் !
கேரளா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகள் பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கவுள்ளது.
பொதுத்தேர்வு தொடக்கம்:
நாடு முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதில் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. அதுமட்டுமல்லாமல் சில மாநிலங்களில் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவித்தனர்.
கொரோனா பரவல் எதிரொலி – திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து!!
கேரளா மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 17ம் தேதி முதல் தொடங்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்பு கேரளா மாநிலத்தில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பொதுத்தேர்வு மற்றும் தேர்தல் இரண்டும் ஒரே சமயத்தில் நடைபெற்றால் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் என்றும் கூறி பொதுத்தேர்வை ஒத்திவைத்தனர்.
TN Job “FB
Group” Join Now
அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு இன்று (ஏப்ரல் 8) முதல் வருகிற 29ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் தற்போது கேரளா மாநிலத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 8) முதல் பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணன் கூறுகையில் சானிடைசர், சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்வுகள் நடைபெறும் என்றும் ஓர் பெஞ்சில் இரு மாணவர்கள் மட்டுமே அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். பாலக்காடு மாவட்டத்தில் 196 மையங்களில் 38,985 10ம் வகுப்பு மாணவர்களும் 246 மையங்களில் 31,352 மாணவர்கள் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத்தவுள்ளனர்.