கொரோனா பரவல் எதிரொலி – திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து!!

1
கொரோனா பரவல் எதிரொலி - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து!!
கொரோனா பரவல் எதிரொலி - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து!!
கொரோனா பரவல் எதிரொலி – திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து!!

கடந்த சில நாட்களாகவே நாட்டில் கொரோனா நோய்த்தொற்று சற்று வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது திருப்பதி ஏழுமலையான் இலவச தரிசனத்தை ரத்து செய்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில்:

கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக விழாக்கள், புனித ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டது. பின்பு நாளடைவில் கொரோனா நோய்பரவல் குறைந்து வந்ததால் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் புனித ஸ்தலங்களில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட்டனர்.

Petrol & Diesel Rate in Chennai – இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

அதன்படி உலக பிரசித்தி பெற்ற கோவிலாக திகழும் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அங்கு இலவச தரிசனம், கட்டண தரிசனம் என பக்தர்களுக்கு அனுமதி வழங்கி பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தனர். இந்நிலையில் தற்போது நாட்டில் கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மராட்டியம் போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் எதிரொலியாக தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் இலவச தரிசனத்திற்கு தடை விதித்துள்ளனர். கடந்த வாரம் 23 ஆயிரம் வரை இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 ஆயிரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 12ம் தேதி முதல் இலவச தரிசனத்திற்கு தடை என்றும் ரூ.300 கட்டண தரிசனத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் மட்டும் அனுமதிக்கவுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகார் – சூரப்பாவிற்கு நோட்டிஸ்?

மேலும் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாஸம் பக்தர்கள் ஓய்வு அரை மற்றும் பூ தேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் டிக்கட்கள் விற்கப்படும். எனவே வருகிற திங்கள் கிழமை வரை பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு செல்வார்கள். அதன் பின்பு ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இலவச தரிசன டிக்கட்களின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்தனர். ஏற்கனவே மராட்டிய மாநிலத்தில் ஷீரடி சாய் பாபா திருக்கோவில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here