களைகட்டிய கபடி ஆட்டம்.., முதல் வெற்றியை பதிவு செய்த தபாங் டெல்லி அணி!!
புரோ கபடி லீக் 2024 தொடரின் முதற்கட்ட லீக் சுற்றுகள் ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று (அக்டோபர் 18) தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு புல்ஸ் அணி போட்டியிட்டது. இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-29 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பவானின் 13 புள்ளிகள் பக்க பலமாக இருந்தது.
இது போன்ற மற்றொரு ஆட்டத்தில், யு மும்பாவை எதிர்த்து தபாங் டெல்லி அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தபாங் டெல்லி அணியானது, 36-28 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது



























