தமிழகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – செப்.30ல் ஏற்பாடு!
தமிழகத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற செப். 30 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் செப். 30 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்காளியின் விலை அதிரடி சரிவு – கிலோ எவ்வளவு தெரியுமா? இன்றைய நிலவரம் இதோ!
இந்த முகாம் ஈரோடு மாவட்ட கலை அறிவியல் கல்லூரியில் தனியார் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது. இதில் 200க்கு மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். 10000க்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0424-2275860 என்ற தொலைபேசி எண், 9499055942 என்ற கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.