
நிறைவேற்றப்பட்ட கச்சத்தீவு தீர்மானம்.. திடீரென இலங்கை செல்லும் பிரதமர் மோடி.. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல்..!!
கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2 ஆம் தேதி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (03-04-2025) கடிதம் எழுதினார். இந்நிலையில் “பிரதமர் மோடி 3 நாள் அரசு முறைப்பயணமாக இன்று (04-04-2025) இலங்கை செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”.
இப்பயணத்தின் போது “பிரதமர் மோடி, அதிபர் திசநாயகவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும், கச்சத்தீவு விவகாரத்தில் பாக் ஜலசந்தி ஆணையம் அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார திசநாயக்க பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது”.

























