
“குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதலுக்கு உகந்தது அல்ல”.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி அறிவித்த அதிர்ச்சி தகவல்..!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) சார்பில் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்திலிருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, மற்றொரு இடத்தில் ஏவுதளம் அமைக்க ISRO திட்டமிட்டது. அதன்படி பல்வேறு கட்ட ஆய்வுகளின் முடிவில் ராக்கெட் ஏவ சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை கடந்த மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ISRO தலைவர் வி. நாராயணன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
PPF-ல் முதலீடு செய்ய போறீங்களா? இன்னும் 2 நாள்ல பண்ணுங்க…முழு விவரங்களுடன்!
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இந்த ஏவு தளம் குறித்து கூறுகையில் “குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளம், ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளத்தை போல் பெரிய ராக்கெட்டுகளை ஏவ உகந்ததல்ல என்றும், அதற்கு மாறாக சிறிய ரக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு தினமும் செலுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் தெரிவித்தார்”.























