PPF-ல் முதலீடு செய்ய போறீங்களா? இன்னும் 2 நாள்ல பண்ணுங்க…முழு விவரங்களுடன்!
சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன. போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் மற்றும் பல நிறுவனங்கள் சேமிப்பு திட்டத்தை வழங்கிவருகிறது. போஸ்ட் ஆபீஸில் அமலில் உள்ள இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை வழங்கி வருகிறது.
OLA, Uber, Rapido வுக்கு தடை….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5 வரை PPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்தப்படுகிறது. அதாவது, ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்தால், அந்த மாதத்திற்கு முழு வட்டியும் கிடைக்கும். ஆனால் ஏப்ரல் 5 ஆம் தேதிக்குப் பிறகு டெபாசிட் செய்தால், அந்த மாதத்திற்கு உங்களுக்கு குறைந்த வட்டி வழங்கப்படுகிறது. எனவே முதலீடு செய்பவர்கள் 5ம் தேதிக்குள் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



























