ஆளுநருக்கு எதிரான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு.. உச்ச நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியுள்ள குடியரசுத் தலைவர்..!!

0
?????????? ?????? ???????? ???????????? ????????.. ???? ??????????????? ?????? ???????????? ?????????? ??????..!!
ஆளுநருக்கு எதிரான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு.. உச்ச நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியுள்ள குடியரசுத் தலைவர்..!!

ஆளுநருக்கு எதிரான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு.. உச்ச நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியுள்ள குடியரசுத் தலைவர்..!!

கடந்த ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2023 ஆகிய காலக்கட்டத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான 12 சட்டத்திருத்த மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த மசோதாக்களை கிடப்பில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. இதை தொடர்ந்து,  உச்ச நீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தையும் பயன்படுத்தி, நிலுவையில் இருந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் “ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பில், மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டுள்ளார். மேலும், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாத போது, உச்ச நீதிமன்றம் அதை நிர்ணயிக்க முடியுமா? உள்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்திடம் எழுப்பபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!