மாநிலத்தில் நாளை (ஜூன் 2) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மரப்பாலம் மற்றும் வெங்கட்டா நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட இருப்பதால் நாளை அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் மின்தடை என மின்வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் துணை மின் நிலையம் மற்றும் மின் பாதைகளில் ஏதேனும் மின்கசிவு ஏற்பட்டுள்ளதா எனவும், மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளதா எனவும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், எந்தெந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட இருக்கிறதோ அந்த பகுதி முழுவதும் மின்தடை அறிவிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்களின் வசதிக்காக மின்தடை செய்யப்பட இருக்கும் பகுதிகள் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்படுகிறது.
வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பு – இழப்பீட்டுத்தொகை ரூ.3.25 லட்சமாக உயர்வு!
மேலும், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அவ்வப்போது மின் துண்டிப்பு மற்றும் மின்கசிவு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். இதன் பேரில் தற்போது தமிழகம் முழுவதுமே அவ்வப்போது துணை மின் நிலையத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
அந்த வகையில் நாளை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மரபாலம் மற்றும் வெங்கட்டா நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால், மரப்பாலம் மற்றும் வெங்கட்டா நகரை சுற்றியுள்ள பகுதி முழுவதும் காலை 9 மணி முதல் 11 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.