Post Office இல் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
Post Office இல் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
Post Office இல் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
Post Office இல் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசு அறிமுகப்படுத்தி அஞ்சல் நிலையத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் “செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில்” டிஜிட்டல் சேமிப்பு கணக்கை தொடங்கி மாதாந்திர தொகையை ஆன்லைன் மூலம் எப்படி பணம் செலுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆன்லைன் மூலம் மாதாந்திர தொகை:

இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதன் விளைவாக பலர் வேலை இழந்தனர். இந்த வகையில் மக்கள் போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகளின் சேமிப்பு திட்டங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் போஸ்ட் ஆஃபிஸில் மத்திய அரசால் அறிமுகபடுத்தப்பட்டுள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டம், பிபிஎஃப், செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகியவற்றில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஜனவரி 1 முதல் 15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

இந்த அடிப்படையில் பெண் குழந்தைகளுக்காக சிறப்பாக செயல்பட்டு வருவது செல்வ மகள் சேமிப்பு திட்டம். இத்திட்டம் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு அதிக பயனுள்ள திட்டமாகும். இதன் மூலம் பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரிலும் சேமிக்கலாம். இத்திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றதன் காரணம் மற்ற திட்டத்தை விட இத்திட்டத்தின் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இந்த வகையில் ரெக்கரிங் டெபாசிட் திட்டம், பிபிஎஃப், செல்வ மகள் சேமிப்பு திட்டங்களின் மாத தொகையை ஆன்லைன் வழியே கட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • முதலில் IPPB ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும் பின்பு ஆப் யை திறந்து அதில் 4 இலக்க MPINஐப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும்.
  • இதையடுத்து ‘DOP சேவைகள்’ என்பதைக் கிளிக் செய்து, பின்னர் சுகன்யா சம்ரித்தி கணக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பின்பு SSA கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிடவும்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இல்லை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

  • இப்போது வைப்புத் தொகையை உள்ளிட்டு பணம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது செலுத்த வேண்டிய தொகையை உறுதிசெய்து, ‘உறுதிப்படுத்து’ பட்டனை கிளிக் செய்யவும்.
  • தற்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வெற்றிகரமான செய்தி வரும்.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!