இந்தியாவில் தலைசிறந்த செல்வாக்கு பெற்ற முதல்வர்கள் பட்டியல் – முக ஸ்டாலின் முதலிடம்!

0
இந்தியாவில் தலைசிறந்த செல்வாக்கு பெற்ற முதல்வர்கள் பட்டியல் - முக ஸ்டாலின் முதலிடம்!
இந்தியாவில் தலைசிறந்த செல்வாக்கு பெற்ற முதல்வர்கள் பட்டியல் - முக ஸ்டாலின் முதலிடம்!
இந்தியாவில் தலைசிறந்த செல்வாக்கு பெற்ற முதல்வர்கள் பட்டியல் – முக ஸ்டாலின் முதலிடம்!

நாடு முழுவதும் தலைசிறந்த செல்வாக்கு பெற்ற முதலமைச்சர்கள் குறித்த ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் தமிழக முதல்வர் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வாக்கு பெற்ற முதலமைச்சர்:

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு மக்களிடையே நன்மதிப்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய முதலமைச்சர்களின் செல்வாக்கு குறித்து “சி.என்.ஓ.எஸ் ஒபினியோம்’’ என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.

Jio, Airtel மற்றும் Vi வழங்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

அந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த கணக்கெடுப்பில் மற்ற முதல்வர்களை காட்டிலும் தமிழக முதல்வர் முன்னிலை வகித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 67 நிகர புள்ளிகள் பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாட்டிலேயே மிகவும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சராக திகழ்கிறார். இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் 79 சதவிகிதம் பேர் முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் திருப்தி அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் +2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

அதனையடுத்து 12 சதவிகிதம் பேர் மட்டுமே அவருடைய செயல்பாடு திருப்தி இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார். அவரை தொடர்ந்து மக்கள் செல்வாக்கு பெற்ற சிறந்த முதலமைச்சர்களில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர்கள் வரிசையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூன்றாவது இடமும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 4வது இடமும், அசாம் முதலமைச்சர் ஹேமந்த் 5வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!