தமிழகத்தில் +2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் +2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் +2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் +2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் +2 துணைத்தேர்வு எழுதி மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் கடந்த 2020 – ல் கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பள்ளி மாணவர்ளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் கடந்த 2021 மே மாதம் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. பின்னர் அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனாலும் ஒரு சில மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். அவ்வாறு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. பின்னர் அந்த தேர்வில் அதிக மதிப்பெண் எதிர்பார்க்கும் மாணவர்கள் அவர்களது விடைத்தாளின் நகல் கோரி அவரவர் பயின்ற பள்ளியின் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் ஆய்வு!

அவ்வாறு விண்ணப்பித்த மாணவர்கள் அக்-1 முதல் 5 ம் தேதி வரை விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது. மேலும் மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் tndge இணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து முதன்மை கல்வி அலுவலகத்தில் அக்-4 மற்றும் 5 ம் தேதிகளில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டது. மேலும் அதற்கான கட்டணத்தை முதன்மை கல்வி அலுவலரிடம் பணமாக செலுத்துமாறும் கூறப்பட்டது. அவ்வாறு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை தேர்வு முடிவுகள் வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Amazon Prime மெம்பர்ஷிப் கட்டணம் திடீர் அதிகரிப்பு – பயனர்கள் அதிர்ச்சி! புதிய கட்டண விபரம்!

தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. தேர்வு பட்டியலில் இல்லாத தேர்வெண்களின் தேர்வர்களின் விடைத்தாளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் சென்று தங்களது திருத்தப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை விளக்கியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!