உங்கள் கணக்கில் ரூ.2,000 பணம் வரப்போகுது – உறுதி செஞ்சுக்கோங்க!
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பிஎம் கிசான் திட்டத்தின் 15வது தவணை உதவித்தொகை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான பெயர் பட்டியலை சோதிக்கும் முறை குறித்த வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.
பி எம் கிசான் திட்டம்:
நாடு முழுவதும் உள்ள சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருட்களை கொள்முதல் செய்து கொள்வதற்காக மத்திய அரசு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் இரண்டாயிரம் என்ற வீதம் ஆண்டுக்கு ரூபாய் 6000 உதவி தொகையை வழங்கி வருகிறது. இதுவரையில் இத்திட்டத்தில் 14 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காதவர்களுக்கு பிஎம் கிசான் தொகை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
மேலும் விரைவில் 15வது தவணை பணம் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதினைந்தாவது தவணை பிஎம் கிசான் தொகையை பெறுவதற்கான பட்டியலில் உங்கள் பெயரை சோதிக்கும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2023 நவ.14: குழந்தைகள் தின விழா – முக்கிய தகவல்கள் இதோ!
வழிமுறைகள்:
- முதலில் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் ’farmers corner’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர் ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- இதில் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
- இப்பொழுது பயனாளிகளின் பெயர் பட்டியல் உங்கள் முன் தோன்றும்.
- அதில் உங்கள் பெயரை சோதித்துக் கொள்ளலாம்.