தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை – 10+ மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் தற்போது பெரும்பாலான மாவட்டங்களிலும் கனமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது.
கனமழை எச்சரிக்கை:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவக்கூடும் என்றும் , மேலும் வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா கடலோர பகுதிகளில் 16ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நவம்பர் 17ஆம் தேதி ஒரிசா கடலோர ர பகுதிகளில் நிலவு கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சியும் நிலவி வருகிறது.
உங்கள் கணக்கில் ரூ.2,000 பணம் வரப்போகுது – உறுதி செஞ்சுக்கோங்க!
இதன் காரணமாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதி வரையிலும் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14 ஆம் தேதியான இன்று முதல் 18ஆம் தேதி வரை வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.