வேகமாக பரவும் புதிய கொரோனா தொற்று.. மீண்டும் ஊரடங்கு? – எச்சரிக்கும் அரசு!
அமெரிக்காவில் எச்.வி1 எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனா தொற்று
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்தது. இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனாவின் வீரியம் குறைந்தாலும், இன்னும் அது முற்றிலுமாக குறையவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி தற்போது மக்களை தாக்கி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் எச்.வி1 எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது.
தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை – 10+ மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
இந்த புதிய வகை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெருந்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த புதிய வகை கொரோனாவின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.