
PM Kisan scheme new update: இனி, உங்களுக்கு ரூ. 4000 உதவித்தொகை கிடைக்கும்..!! ” அரசு அதிரடி அறிவிப்பு”..!!
நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால், “PM கிசான் மந்தன் யோஜனா” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இந்த திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தவணை முறையில் ரூ. 6000 வழங்கப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு 4 மாதங்களாக பிரித்து 3 முறை ரூ. 2000 வீதம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், PM கிசான் மந்தன் யோஜனா-வின் 18 வது தவணையை வரும் அக்டோபர் 5ம் தேதிக்கு பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கர்நாடகாவில் BJP ஆட்சியின் போது PM கிசான் திட்டத்தின் கீழ், நிதி உதவி பெறும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000-ல் இருந்து ரூ. 10,000 மாக உயர்த்தியதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையாக, PM கிசான் திட்டத்தில் நிதி உதவி பெறும் சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ. 4000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 10,000 என தவணை முறையில் நிதி உதவி பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார் . மேலும், இந்த திட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீர் விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

























