IND vs BAN 2nd Test: 4ம் நாள் முடிவில் பங்களாதேஷ் 26 ரன்கள் பின்னிலை.. தொடர் வெற்றியை நோக்கி இந்தியா!!
இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 27ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய பங்களாதேஷ் அணியில் மொமினுல் ஹக் மற்றும் மெஹிதி ஹசன் சிறப்பாக விளையாடி அசத்தினர். குறிப்பாக மொமினுல் ஹக் 17 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட (107* ரன்கள்) சதம் விளாசினார்.
IPL 2025: மெகா ஏலத்திற்கான விதிமுறைகள்.. தோனிக்காக கொண்டுவரப்பட்டதா புதிய விதி??
இவருக்கு அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க பங்களாதேஷ் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி அசத்தியது. ஆனாலும் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. எனவே இன்றைய நாள் முடிவில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களை குவித்து 26 ரன்கள் பின்னிலையில் உள்ளது. இதையடுத்து நாளை 5ம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி நாளை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.


























