IPL 2025: மெகா ஏலத்திற்கான விதிமுறைகள்.. தோனிக்காக கொண்டுவரப்பட்டதா புதிய விதி??
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் வரும் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, இந்நிலையில் பெங்களூருவில் நடந்த IPL நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ENG vs AUS 2024: மழையால் மாறிய போட்டி.. தொடரை வென்று ஆஸ்திரேலியா அபாரம்!!
இதன் முடிவில், ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை மெகா ஏலத்திற்கு முன்பாக தக்க வைத்துக்கொள்ளலாம். அதில் ஒரு UNCAPPED வீரரை கட்டாயம் தக்க வைக்க வேண்டும் என்ற விதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் வீரர்களை வாங்க அணிகள் 120 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம். 2025 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் 7.5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


























