48 மணிநேரத்திற்குள் விரைவு கடன் அளிக்கும் PhonePe.. அதிர்ச்சியில் ஆழ்ந்து போன பயனாளர்கள் ..

0
48 ???????????????? ?????? ???? ????????? PhonePe.. ????????????? ??????? ??? ?????????? ..
48 மணிநேரத்திற்குள் விரைவு கடன் அளிக்கும் PhonePe.. அதிர்ச்சியில் ஆழ்ந்து போன பயனாளர்கள் ..

48 மணிநேரத்திற்குள் விரைவு கடன் அளிக்கும் PhonePe.. அதிர்ச்சியில் ஆழ்ந்து போன பயனாளர்கள் ..

 

போன்பே (PhonePe) என்பது ஒரு மொபைல் பேமெண்ட் தளமாகும், இதைப் பயன்படுத்தி நீங்கள் UPI மூலம் பண பரிமாற்றம், தொலைபேசி எண்களை ரீசார்ஜ் செய்வது மற்றும் பில்களை செலுத்தி கொள்ளலாம். மேலும், சுமூகமான பரிவர்த்தனைகளை உறுதிசெய்யவும், மோசடி நடவடிக்கைகளில் இருந்து பயனர்களைப் பாதுகாக்கவும் போன்பே உதவுகிறது. இந்நிலையில் போன்பே தகுதியான பயனாளிகளுக்கு விரைவு கடன் அளிக்கிறது.

இதற்கு பயனாளர் போன்பே செயலின் கடன் விருப்பம் பக்கத்திற்கு சென்று பைக், கார், கல்வி, வீடு, சொத்து, தங்கம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் என பட்டியலில் உள்ள ஏதேனும் விருப்பத்தை தேர்வு செய்யலாம். பின்னர் தேவையான கடன் தொகை மற்றும் கால அளவைத் தேர்ந்தெடுத்து, இஎம்ஐ மற்றும் தினசரி தவணைகள் போன்ற திருப்பிச் செலுத்தும் முறையை தேர்வு செய்யவும். இதை தொடர்ந்து உங்கள் கடன் விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் மதிப்பாய்வு செய்யப்படும். இறுதியாக போன்பே கடன் விதிமுறைகளை நீங்கள் ஒப்புக் கொண்டவுடன், அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை 48 மணிநேரத்திற்குள் பயனாளரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும் என போன் பே நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!