தமிழகத்தை வாட்டவரும் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…!! ” இது நம்மை விடாது போல”..!!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு-மேற்கு திசையை நோக்கி நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததை தொடர்ந்து, தற்போது மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது, நாளை(டிசம்பர் 4) தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல கிழக்கு சுழற்சி உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி, தமிழக கடற்கரை பகுதிகளில் நகரக் கூடும் என தெரிவித்துள்ளது.


























