ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது..!! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்”..!!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்றைய முன் தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது , மன்னர் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு புகுத்தி, வடமேற்கு-மேற்கு திசையை நோக்கி நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று(டிசம்பர் 13) வலுவிழந்து உள்ளது. இதை தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


























