பெட்ரோல், டீசலின் விலை திடீர் உயர்வு – லிட்டர் ரூ.331க்கு விற்பனை!
பாகிஸ்தானில் திடீரென எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசலின் விலை:
பாகிஸ்தான் இம்ரான்கான் பிரதமராக இருந்த நிலையில் நாட்டின் நிதிநிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. அது மட்டுமல்லாமல், அரசு சொத்தினை அபகரித்து பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை பிரதமர் சேர்த்த நிலையில் தற்போது பிரதமர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும், நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது.
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம் – போலீஸ் டிஜிபி எச்சரிக்கை!
இதனையடுத்து, பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.305 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இன்னும் கூடுதலாக வரியுடன் சேர்த்து லிட்டர் ரூ.331க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், டீசல் லிட்டருக்கு ரூ.311க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.329க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற எரிபொருட்களின் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் துன்புற்று வருகின்றனர்.