தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம் – போலீஸ் டிஜிபி எச்சரிக்கை!
தமிழகத்தில் அதிகரித்து வரும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக டிஜிபி வன்னியபெருமாள் அவர்கள் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரேஷன் அரிசி கடத்தல்:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசி, சர்க்கரை போன்ற உணவு தானியங்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தொடர்பாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அதவாது பொருட்களை குறைவான விலையில் வாங்கி அதிக விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை டிஜிபி வன்னிய பெருமாள் அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஐவிஆர் அழைப்பு மூலமாக பணமோசடி – சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் பணிகளை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரயில் மூலமாக அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தவிர்க்க ரயில் நிலையங்களில் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.