தமிழகத்தில் ஆட்சேபனையற்ற நிலங்களில் வாழும் 80,000 பேருக்கு பட்டா..!! அரசாணை வெளியீடு..!!
தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின், போது தமிழகத்தில் பல்லாயிர மக்கள் ஆட்சேபனையற்ற நிலங்களில் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், அவர்கள் பட்டா வாங்க சிரமப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனவே, இதன் முதற்கட்டமாக சென்னையை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 80,000 பேருக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டு, இதற்கான பணிகளை ஆறு மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
தமிழகத்தில் நாளை (28.04.2025) மின்தடையா..? வெளியான முக்கிய தகவல் உள்ளே..!!
இந்நிலையில், இன்று இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆட்சேபனையற்ற நிலங்களில் வாழும் 80,000 பேருக்கு விரைவில் பட்டா வழங்கப்படவுள்ளது.

























