நீட் வினாத்தாள் மோசடி, கசிவுகளை தெரிவிக்க புதிய இணையத்தளம்..!! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!!
இந்தியாவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு வரும் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த வருடம் தேர்விற்கு முன்னதாகவே நீட் வினாத்தாள் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வருடம், இது போன்ற சிக்கல்களை தவிர்க்க தேசிய தேர்வு முகமை முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதுகுறித்து கீழே விரிவாக காண்போம்.
தமிழகத்தில் ஆட்சேபனையற்ற நிலங்களில் வாழும் 80,000 பேருக்கு பட்டா..!! அரசாணை வெளியீடு..!!
அதாவது, தேசிய தேர்வு முகமை நீட் வினாத்தாள் மோசடி, கசிவுகளை தெரிவிக்க புதிய இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது NEET.NTA.AC.IN மற்றும் NTA.AC.IN என்ற இந்த இரண்டு புதிய இணையதள பக்கம் வாயிலாக ஆதாரத்துடன் புகார் அளிக்கும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்ப வேண்டாம் எனவும் NTA அறிவுறுத்தியுள்ளது.

























