அணு ஆயுதங்களால் பதிலடி தருவோம்..!! பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சால் பரபரப்பு..!!
கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் மரணமடைந்தனர். இதற்கு பின்னணியில், பாகிஸ்தானில் உள்ள ஒரு தீவிரவாத அமைப்பு உள்ளதால், அந்நாட்டிற்கு எதிராக ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவ்வாறு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக சிந்து நதி நீர் ஒப்பந்தந்தை ரத்து செய்தது.
நீட் வினாத்தாள் மோசடி, கசிவுகளை தெரிவிக்க புதிய இணையத்தளம்..!! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!!
இந்த ஒப்பந்தத்தின் படி, சிந்து நதி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆறு நதிகளில் 3 இந்திய வசமும் 3 பாகிஸ்தானின் வசம் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 80 % நீர் ஆதாரத்தை பாகிஸ்தான் கொண்டிருப்பினும், இந்திய வசம் உள்ள 20 % நீர் ஆதாரத்தின் வழி செல்லும் கிளை நதிகள் தான், பாகிஸ்தானின் வளம் மிக்க பகுதிகளாக கருதப்படும் பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களின் விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதன் மூலம் அங்குள்ள விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், “சிந்து நதி நீரை நிறுத்தினால் அணு ஆயுதங்களால் பதிலடி தருவோம்” என பாகிஸ்தான் அமைச்சர் கூறிய கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், “நீர் விநியோகத்தை நிறுத்தினால் போருக்கு தயாராகிக் கொள்ள வேண்டும்” என்றும், “130 வகை அணு ஆயுதங்களை இந்தியாவிற்காகவே தயார் நிலையில் வைத்துள்ளதாகவும், கோரி, ஹசீன்,காஃஸ்வினி போன்ற ஏவுகணைகளும் தாக்க தயாராக உள்ளதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் ஹனீப் அப்பாசி தெரிவித்துள்ளார்.

























