துணை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு – இன்று தொடக்கம்!!

0
துணை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு - இன்று தொடக்கம்!!
துணை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு - இன்று தொடக்கம்!!
துணை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு – இன்று தொடக்கம்!!
துணை மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேற்று நடந்துள்ள நிலையில் இன்று பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது.

துணை மருத்துவ படிப்புகள்:

மருத்துவ துறையில் மருத்துவர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருப்பது துணை மருத்துவ பிரிவில் பணியாற்றுபவர்கள் தான். 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் துணை மருத்துவ படிப்பின் பல பிரிவுகளிலும் சேர்ந்து கொள்ளலாம். 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை படித்தவர்கள் துணை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். துணை மருத்துவ படிப்புகளுக்கான சேர்கை கவுன்சிலிங் முறையில் நடத்தப்படுகிறது.

சிறந்த மேலாண்மை கல்விக்கான சர்வதேச பட்டியல் – 5 இந்திய கல்வி நிறுவனங்கள்!!

கலந்தாய்வு:

நடப்பு ஆண்டில் கொரோனா தாக்கத்தின் காரணமாக அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தாமதமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் 17 துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து தேதி ஏதும் அறிவிக்கபடாமல் இருந்தது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 4ம் தேதி கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் நடப்பு ஆண்டில் கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில், 53 மாணவர்கள் அழைக்கப்பட்டு 27 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதில் 23 பேர் அரசு மருத்துவ கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர்.

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை விரைவில் பள்ளிகள் திறப்பு – குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு!!

நான்கு கட்ட கலந்தாய்வு:

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் நான்கு கட்டங்களாக ஆன்லைன் முறையில் நடத்தப்பட இருக்கிறது. முதல் சுற்று இன்று முதல் 15ம் தேதி வரையிலும், 2ம் சுற்று 12 முதல் 18ம் தேதி வரையிலும், 3ம் சுற்று 15 முதல் 21ம் தேதி வரையிலும், நான்காம் சுற்று 18 முதல் 24ம் தேதி வரையிலும் நடக்க உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!