தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை விரைவில் பள்ளிகள் திறப்பு – குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு!!

13
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை விரைவில் பள்ளிகள் திறப்பு - குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு!!
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை விரைவில் பள்ளிகள் திறப்பு - குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு!!
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை விரைவில் பள்ளிகள் திறப்பு – குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு!!

தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அந்த வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரங்களையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

பாடத்திட்டங்கள் குறைப்பு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் என பல்வேறு முறைகளில் பாடங்கள் எடுக்கப்பட்டன. மேலும் நோய்த்தொற்று குறைந்த காரணத்தால் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலன் கருதி, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடத்த கருத்துகேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்ததால் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஒரு நாளைக்கு 12 மணிநேரம், வாரத்திற்கு 4 நாட்கள் வேலை – மத்திய அரசு திட்டம்!!

குறைக்கப்பட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி பிப்ரவரி 8 முதல் 9, 11ம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கின. பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் உள்ளதால் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு படிப்படியாக பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வயது வரம்பு தளர்வு – உச்சநீதிமன்றம் கேள்வி!!

மேலும் மாணவர்கள் எளிதில் பங்கேற்கும் வகையில் பொதுத்தேர்விலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கான (2020-21) 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு 50 சதவீதம் வரை குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே 9, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட அறிவிப்புக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலும் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

13 COMMENTS

  1. No open school please 😭😭😭😭🏫🏫🏫🏫🏫😭🙄🙄😭🥺🥺🥺🥺🥺😡😬😫😫😫😫😫😫😫😫😱😱😱😱😱😣😣😣😣😣😩😩😩😩😩😖😖😖😖😖😖😖💔💔💔💔💔

  2. வீட்ல பிள்ளைங்க தொல்லை தாங்க முடியவில்லை சீக்கிரம் பள்ளியை ஓபன் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!