பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல் ? – மத்திய அமைச்சர் விளக்கம்!
நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
பழைய பென்ஷன் திட்டம்:
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் அனைத்தும் குறைகிறது என்பதால் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவரையிலும் சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மற்றும் மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
EPFO கணக்கில் வட்டி தொகை வந்தாச்சா? – இந்த முறையில் செக் பண்ணுங்க!
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் வளங்களின் இருப்பு மற்றும் வரவு செலவு திட்ட கணக்கீடுகளை நாம் பார்க்க வேண்டும். இது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஓய்வூதிய பிரச்சனைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் நடப்பாண்டு இறுதிக்குள் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.