அரசு ஊழியர் சங்கங்கள் பேரணி – NPS அமல்படுத்த கோரிக்கை!

0
அரசு ஊழியர் சங்கங்கள் பேரணி - NPS அமல்படுத்த கோரிக்கை!
அரசு ஊழியர் சங்கங்கள் பேரணி - NPS அமல்படுத்த கோரிக்கை!
அரசு ஊழியர் சங்கங்கள் பேரணி – NPS அமல்படுத்த கோரிக்கை!

மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர் சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பேரணி போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டம்:

அரசு ஊழியர்களுக்கு தற்போது அமலில் இருந்து வரும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்கான நிதி பாதுகாப்பு இல்லை என்று பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநில அரசு ஊழியர்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் சண்டிகர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தரப்பு ஊழியர் சங்கங்களும் ஒன்றிணைந்து பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்பட்டது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்கு ஓய்வுக்கு பிறகு நிதி பாதுகாப்பை வழங்க அரசு தவறிவிட்டது. இதனால் நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத்திற்கான தேவை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு – பள்ளிக்கல்வித்துறை முடிவு

இதன் காரணமாக அரசு விரைந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த பேரணியில் சண்டிகர் நகரில் இருக்கும் பல்வேறு தொழிற்சங்கங்கள், PGIMER நர்சிங் நல சங்கம், PGIMER ஊழியர் சங்கம், பி ஜி ஐ பாதுகாப்பு காவலர் நல சங்கம் பி ஜி ஐ துப்புரவு தொழிலாளர் சங்கம் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், கல்வித்துறை சங்கம், OT டெக்னீசியன் சங்கம், வருமானவரி சங்கம், போக்குவரத்து சங்கம் போன்ற பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!