
மகளிர் இலவச பேருந்தில் அரசு கொண்டு வந்த மற்றுமொரு அசத்தல் திட்டம்..!! இத நீங்க எதிர்பாத்திருக்கமாட்டிங்க…!! முழு விவரம் உள்ளே…!!
தமிழக அரசு குறிப்பாக பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை மற்றும் கட்டணமில்லா பேருந்து வசதி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், தற்போது, தமிழக அரசு, பேருந்துகளில் பெண்களுக்கு மற்றுமொரு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, “மகளிர் சுய உதவி குழுவிலுள்ள பெண்கள் 25 கிலோ வரை உள்ள பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக கொண்டு செல்லலாம்” என்று அறிவித்துள்ளது.
மேலும், “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஏசி பேருந்துகள் நீங்கலாக, நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் 100 கி.மீ வரை அவர்கள் பயணிக்கலாம்” என்றும் தெரிவித்துள்ளது. மேலும், மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்த பொருட்கள் முழுவதையும் சந்தைப்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த சலுகைகளை கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்து நடத்துனர்கள் அவர்களின் பயணத்தின் போது ‘கட்டணமில்லா சுமை சீட்டுகளை’ வழங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

























