
10ம் வகுப்பு வரை படித்தவரா நீங்கள்..? பயிற்சியின் போதே ரூ 2 லட்சம் வரை வருமானம் ஈட்ட இத செய்யுங்க …!!
பெண்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி , பீமா சகி யோஜனா (LIC Bima Sakhi Yojana) என்ற LIC திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில், தொழில் முகவராக அல்லது காப்பீட்டு நண்பராக பெண்கள் பயிற்சியின் போதே ரூ 2 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதி மற்றும் விதிமுறைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
அதாவது, பீமா சகி யோஜனா திட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும், 18 முதல் 70 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் . இதை தொடர்ந்து, இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியின் போது மொத்தம் ரூ.2 லட்சம் வழங்கப்படும். முதல் ஆண்டில் ரூ.7000, இரண்டாம் ஆண்டில் ரூ.6000, மூன்றாம் ஆண்டில் ரூ.5000 வழங்கப்படும். அதனுடன், பெண்களால் விற்கப்படும் பாலிசிகளில் 65 சதவீதம் செயலில் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு போனஸ் கமிஷனும் கிடைக்கும். இந்த பீமா சகி யோஜனா திட்டத்தில் விண்ணப்பிக்க, பெண்கள் LIC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பீமா சகி விருப்பத்தைக் கிளிக் செய்து தேவையான தகவல்களை உள்ளிடவும். அதன் பின்னர் கேப்ட்சா குறியீட்டை நிரப்பி உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

























